Tuesday 18 October 2011

முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி WAS MUHAMMAD A SINNER?


இரவின் அமைதியில், மக்களின் சத்தங்களை விட்டு தூரமாக வந்து, தன் இருதயத்தின் நினைவுகளை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு, ஒரு மனிதன் தன் மனதிற்கு மட்டுமே தெரிந்த சில உண்மைகளை இறைவனின் முன்பாக சமர்ப்பிக்கிறார்.
அல்லாஹ்! நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாக‌ச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.

"Oh God, I acknowledge and confess before You, all my sins, please forgive them, as no one can forgive sins except You. Forgive my mistakes, those done intentionally, or out of my ignorance, with or without seriousness. Oh God, forgive my sins and my ignorance, forgive my sins of the past and of the future, which I did openly or secretly. Forgive the wrong I have done, jokingly or seriously. I seek Your protection from all the evil I have done. Wash away my sins, and cleanse my heart, from all the sins as a white garment is cleansed from the filth, and let there be long distance between me and my sins, as You made the East and West far from each other."
இந்த ஜெபமானவது (வேண்டுதலானது) தன் இருதயத்தின் ஆழத்தில் இருக்கும் பாவங்களின் வீரியத்தை அறிந்த ஜெபமாக உள்ளது. பாவத்தின் பக்கம் சாயக்கூடிய தன் சுபாவத்தை இந்த ஜெபம் அங்கீகரிக்கிறது. தன் பாவ பிடியிலிருந்து விடுதலை ஆகவேண்டும் என்ற ஆவல் இந்த வேண்டுதலில் காணப்படுகிறது. இந்த ஜெபத்தில் அம்மனிதர் பாவத்திலிருந்து விடுபடவேண்டும் என்று போராடுகின்றதை காணமுடியும். தன்னுடைய கடந்த கால மற்றும் எதிர்கால பாவங்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுகின்றார். ஏனென்றால், தான் ஒரு சாதாரண மனிதனாக இருப்பதால், எதிர் காலத்தில் பாவம் செய்வார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இது தவிற்க முடியாதது. இவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். தான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும், குற்றங்களையும் மன்னிக்கவேண்டும் என்று அவர் வேண்டுகின்றார். தான் செய்த இந்த பாவங்கள் தீயவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார், ஆகையால் அவைகளை இறைவனுக்கு முன்பாக அறிக்கையிடுகின்றார். தான் செய்த பாவங்களை லேசானவைகள் என்று அவர் அவைகளைப் பற்றி லேசாக நினைக்கவில்லை. இறைவனின் பார்வையில் அவைகள் அருவறுப்பானவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார்.

இந்த மனிதர் ஒரு பாவி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

முஹம்மது பாவியாக இருந்தாரா?


இந்த வேண்டுதலை செய்தவர் முஹம்மது ஆவார். ஸஹீ புகாரி பாகம் 8: எண்கள் 335, 379, 407 மற்றும் 408 [1] என்ற ஹதீஸ்களில் காணப்படும் முஹம்மதுவின் பாவ மன்னிப்பு வேண்டுதல்களின் மொத்த சுருக்கத்தைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். தான் ஒரு பாவி என்று முஹம்மதுவிற்கு நன்றாகத் தெரியும். ஆகையால் தான் அவர் தன் பாவங்களை இப்படி வெளியரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அடிக்கடி தான் ஒரு பாவி என்பதை அவர் கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, தன் வாயின் மூலமாக வெளிப்பட்ட குர்ஆனும் அவரை ஒரு பாவி என்றே அடையாளம் காட்டுகின்றது. இப்படி இருந்தும், தற்காலத்தில் உள்ள அனேக இஸ்லாமியர்கள் முஹம்மது ஒரு பாவி அல்ல என்றுச் சொல்கிறார்கள்.
கேள்வி: முஹம்மது தான் ஒரு பாவி என்று அறிக்கையிடுகிறார், அப்படியிருக்கும் போது அவர் ஒரு பாவியில்லை என்று அவர் சொன்னதற்கு விரோதமாக ஏன் இன்றையை இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்?

இந்த கேள்விக்கு பதிலை நான் காண்பதற்கு முன்பாக, முஹம்மது பாவியில்லை என்றுச் சொல்கின்ற தற்கால/மத்திய கால இஸ்லாமியர்களின் வாதங்களைக் காண்போம். அதன் பிறகு முஹம்மது ஒரு பாவி தான் என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உதவி கொண்டு நிருபிப்போம்.

 "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற இஸ்லாமிய கோட்பாடு

அல்லாஹ் ஒரு சிறப்பான பாதுகாப்பை தன் தீர்க்கதரிசிகளுக்கு கொடுத்துள்ளார் அதன் மூலம் அவர்கள் "பாவிகளாக" இருக்கமாட்டார்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட‌ இந்த புதிய கோட்பாட்டைப் பற்றி ஒரு அருமையான விளக்கத்தை ஜான் கில்கிறைஸ்ட் தன் புத்தகமாகிய "முஹம்மது மற்றும் இஸ்லாமிய மதம்" என்ற புத்தகத்தில் தருகிறார் [2]. இந்த கோட்பாட்டை "இஸ்மா" என்று கூறுகிறார்கள். இந்த புத்தகத்தை இத்தொடுப்பில் படிக்கலாம்:

http://answering-islam.org/Gilchrist/Vol1/

இந்த புத்தகத்திலிருந்து நான் அனேக பத்திகளை மேற்கோள்களாக காட்டுகிறேன்.

பக்கம் 273 லிருந்து சில பத்திகள்
"தீர்க்கதரிசிகள் அனைவரும் 'இஸ்மா' என்ற பாவத்திலிருந்து பாதுகாப்பு என்ற சிறப்பான சலுகையை அனுபவித்தார்கள், அதாவது அவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்கு 'இஸ்மா' உதவுகிறது, இதன் மூலம் அவர்கள் பாவிகள் அல்ல என்று இன்றுள்ள முழு இஸ்லாமிய உலகமும் நம்பிக்கொண்டு இருக்கிறது. இது இஸ்லாமுக்கு முரண்பாடான கோட்பாடாகும். குர்ஆனும் ஹதீஸ்களும் போதிக்கும் போதனைக்கு முரணாக இந்த நம்பிக்கை இருக்கிறது.

இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்பு, இஸ்லாம் மற்றும் ஹதீஸ்கள் போதிப்பதற்கு எதிராக, இந்த புகழ்பெற்ற புதிய கோட்பாடு உருவாகி வளர்ச்சி அடைந்தது. இது முதன் முதலில் ஃபிக் அக்பர் 2 என்று அழைக்கப்பட்ட கோட்பாடாகும், இது கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

"எல்லா தீர்க்கதரிசிகளும் பாவத்திலிருந்து விடுபட்டவர்கள், அது சிறியதாக இருந்தாலும் சரி, மிகவும் கொடியதாக இருந்தாலும் சரி, நம்பிக்கையின்மையாக இருந்தாலும் சரி, தீய நடக்கைகளாக இருந்தாலும் சரி, இவர்கள் அவைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இருந்தும் போராட்டமும், சிறிய பிழைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கும்" ("All the Prophets are exempt from sins, both light and grave, from unbelief and sordid deeds. Yet stumbling and mistakes may happen on their part. Wensinck, "The Muslim Creed, p. 192.")

இஸ்லாமிய மூல நூல்கள் சொல்வதை நாம் மறுக்க முடியாது. ஆகிலும், நபிகள் செய்ததாக குர்ஆனும் ஹதீஸ்களும் சொல்லும் பாவங்களை, இவர்கள் வெறும் "சிறிய பிழைகள்" என்று சொல்லி அவர்களின் பாவங்களின் தன்மையை லேசாக்குகிறார்கள். இதே போல உள்ள இன்னொரு இஸ்லாமிய விவரம் "ஞாபக மறதியைப் பற்றியதாகும்". இஸ்லாமிய நூல்கள் எவ்வளவு தீவிரமாக நபிகளின் பாவங்களைப் பற்றி கூறினாலும், இன்றைய இஸ்லாமிய எழுத்தாளர்கள் அச்செயல்களுக்கு காரணம் ஞாபக மறதி தான் என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.

இந்த கோட்பாடு இஸ்லாமில் உருவானதற்கு இரண்டு அடிப்படை காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, உலகில் வாழ்ந்தவர்களில் இயேசு தான் பாவமற்ற மனிதராக வாழ்ந்தார் என்று பைபிள் சொல்வதை ஆரம்பகால இஸ்லாமியர்கள் சீக்கிரத்திலேயே கண்டுக்கொண்டனர். இதனை சமாளிக்க இஸ்லாமியரகள் கண்டுபிடித்த ஒரு கோட்பாடு "எல்லா தீர்கக்தரிசிகளும் முஹம்மதுவோடு கூட சேர்த்து பாவமற்றவர்கள்" என்ற கோட்பாடாகும். முஹம்மதுவை விட இயேசுவின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருப்பதை இஸ்லாமியர்கள் கண்டுக்கொண்டதால், அவர்களால் அதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இயேசு அற்புதங்கள் செய்தது போல, முஹம்மது எந்த அற்புதத்தையும் செய்யவில்லையானாலும், பொய்யான சில அற்புதங்களை இட்டுக்கட்டி அவைகளை முஹம்மது செய்தார் என்று சில இஸ்லாமியர்கள் கூறுவது போல, இயேசு பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை சகித்துக்கொள்ளமுடியாமல், முஹம்மதுவும் பாவமில்லாதவர் என்ற பொய்யான கோட்பாட்டை இஸ்லாமியர்கள் உருவாக்கினார்கள்.

இரண்டாவதாக, இஸ்லாமின் படி வெளிப்பாடுகள் மூலமாக கிடைக்கும் இறைவசனங்கள் காபிரியேல் (ஜிப்ராயீல்) மூலமாக எல்லா நபிகளுக்கும் கிடைத்தது. ஆகையால், இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை நபிகள் (தீர்க்கதரிசிகள்) பெறவேண்டுமானால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தூய்மை நிறைந்ததாக இருக்கவேண்டும், எந்த பாவமும் செய்யாதவர்களாக இருக்கவேண்டும் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது. நபிகள் பாவங்கள் செய்கின்றவர்களாக இருந்தால், அவர்களால் எப்படி இறைவசனங்களை பிழையில்லாமல் மக்களிடம் சேர்க்கமுடியும்? இப்படிப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைத் தான் நபிகள்(தீர்க்கதரிசிகள்) பாவங்கள் செய்யமாட்டார்கள் என்ற கோட்பாட்டை உருவாக்க இரண்டாவது காரணமாக இருந்தது.
மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒரு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது?
முஹம்மது ஒரு பாவி என்பதற்கு குர்-ஆனிலிருந்து ஆதாரங்கள்.

முஹம்மது ஒரு பாவி அல்லது பாவம் செய்தவர் என்று குர்ஆன் அடையாளம் காட்டுகிறது: 40:55, 48:2, and 47:19:
40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!

48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
குரான் 47:19ம் வசனத்தை இரண்டு தமிழ் மொழிப்பெயர்ப்புக்களிலும், ஐந்து ஆங்கில மொழியாக்களிலும் காணலாம். (குறிப்பு: இவ்வசனங்களில் முஹம்மது தன்னுடைய பாவங்களுக்காகவும் மற்றவர்களின் பாவங்களுக்காகவும் மன்னிப்பு கோறுகிறார்)
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான். (பீஜே தமிழாக்கம்)

"Know that there is no deity but God. Implore Him to forgive your sins and to forgive the true believers, men and women. God knows your busy haunts and resting places." Dawood [3]

"So know (O Muhammad) that there is no God save Allah, and ask forgiveness for thy sin and for believing men and believing women. Allah knoweth (both) your place of turmoil and your place of rest." Pickthall [4]

"Know thou therefore that there is no god but God, and ask forgiveness for thy sin, and for the believers, men and women. God knows your going to and fro, and your lodging." Arberry [5]

"Know, then, that there is no god but God; and ask pardon for thy sin, and for believers, both men and women. God knows your busy movements and your final resting places." Rodwell [6]

"Know therefore that there is no god but Allah and ask forgiveness for the fault and for the men and women who believe: for Allah knows how ye move about and how ye dwell in your homes." Ali [7]
இந்த குர்ஆன் வசனத்தில் பயன்படுத்திய வார்த்தை "தன்ப்" (dhanb or thanb) என்பதாகும். இந்த வார்த்தை அனேக முறை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹக்ஸ் இஸ்லாமிய அகராதி இவ்வார்த்தையின் பொருளை "பாவம் அல்லது குற்றம் அல்லது இவைகளைப்போல உள்ள ஒரு குற்றம்" [8] என்று வரையறுக்கிறது. (Hughes Encyclopedic Dictionary of Islam)[8]

முஹம்மது ஒரு பாவி என்று குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது. இவ்வார்த்தையை குர்ஆன், முஹம்மதுவிற்கும் சேர்த்தே சொல்கிறது. முஹம்மது ஒரு பாவியில்லை என்று வாதம் புரியும் இஸ்லாமியர்கள் இவ்வார்த்தைக்கு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். எனவே, இந்த வார்த்தை குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அல்லது அவ்வசனம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அதன் பொருள் என்ன? இந்த வார்த்தையின் உண்மைப்பொருளை நாம் ஆரய்வோம். இறைவன் தண்டனை அளிக்கும் பாவமாக இவ்வார்த்தையின் பொருள் உள்ளதா? அல்லது இறைவன் மன்னிக்கும் அளவில் உள்ள மிகச்சிறிய பிழை என்ற பொருள் இவ்வார்த்தைக்கு உள்ளதா என்பதை நாம் ஆராய்வோம். இவ்வார்த்தையின் உண்மைப் பொருளை அறியவேண்டுமானால், இவ்வார்த்தை எங்கே எல்லாம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவ்வசனங்கள் சொல்லும் பொருள் அல்லது சூழல் என்ன என்பதை காண்போம்.

இவ்வார்த்தையின் பொருளைப் பற்றி குர்ஆனே பேச இப்போது நாம் இடம் கொடுப்போம்.

குர்ஆனில் இவ்வார்த்தை 39 இடங்களில் வருகிறது, சில இடங்களில் என்ன பாவம் என்பதைச் சொல்லாமல் பொதுவாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு 3:31ம் வசனத்தை பாருங்கள்,
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; ....
இவ்வசனத்தில் "எந்த பாவம்" என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், "பாவம்" என்று மட்டும் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், "தன்ப்" என்ற வார்த்தை வேறுபல வசனங்களில் "என்ன பாவத்தைப் பற்றி" அவ்வசனம் குறிப்பிடுகின்றது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட பட்டியலை நாம் காண்போம். நான் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்ட 22 இடங்களை மேற்க்கோள் காட்டப்போகிறேன், ஏனென்றால், குர்ஆன் இவ்வார்த்தையை எவ்வளவு வீரியமாக பயன்படுத்துகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களை நான் உற்சாகப்படுத்துகிறேன், "தன்ப்" என்ற வார்த்தையை மிகவும் லேசானதாக பொருள்படும் படி அல்லாஹ் குர்ஆனில் எங்கேயாவது பயன்படுத்தியுள்ளாரா என்று தேடிப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த "தன்ப்" என்ற பாவத்தை செய்தவருக்கு கொடுக்கப்படும் மிகவும் கொடுமையான தண்டனைக்கு முரண்பாடாக அல்லாஹ் மிகவும் லேசான தண்டனையை கொடுத்ததாக ஏதாவது வசனம் உங்களுக்கு தென்படுகின்றதா என்று தேடிப்பாருங்கள். நான் தேடிப்பார்த்ததில், எனக்கு கிடைக்கவில்லை.

"தன்ப் - DHANB" அல்லது பாவம் என்ற வார்த்தை வரும் குர்ஆன் வசனங்களின் தொகுப்பு:
3:11 (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
பார்வோனின் மக்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அளிப்பதாக அல்லாஹ் கூறுகிறார், அவர்கள் செய்த "தன்ப்" என்ற பாவத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
3:16 இத்தகையோர் (தம் இறைவனிடம்): 'எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம், எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!' என்று கூறுவார்கள்.
இந்த வசனத்தின்படி மக்கள் தாங்கள் செய்த "தன்ப்" காக மன்னிப்பை கேட்கின்றனர், ஏனென்றால், தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்காமல் போனால், அவர்கள் நரகத்தின் அக்கினியில் விழவேண்டியிருக்கும்.
5:18 யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
இங்கு, கிறிஸ்தவர்களும் யூதர்களும் அவர்களின் "தன்ப்" என்ற பாவத்தினால் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படுவார்கள் என்று முஹம்மது கூறுகிறார். ஆக, அவர்களின் தன்ப் என்ற பாவம் அவர்களுக்கு தண்டனையை சம்பாதித்துக் கொடுத்தது, பாராமுகமாக விட்டுவிடுவதற்கு இது ஒன்றும் சிறிய பாவமில்லை அல்லாஹ்வின் பார்வையில்.
5:49 இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
இந்த வசனத்தில் "தன்ப்" என்பது ஒரு "குற்றமாக" கருதப்படுகிறது. சிந்திக்கும் சக்தியுள்ள எந்த மனிதனாவது குற்றம் புரிவது வெறும் சிறிய பிழை என்று கருதுவானா? நிச்சயமாக அப்படி கருதமாட்டான். இறைவன் குற்றங்களை எப்படி கருதுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீரகள்?
6:6 அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
பல வம்சங்களை/சந்ததிகளை அவர்களின் "தன்ப்" காக அழித்ததாக இறைவன் கூறுகின்றான்.
7:100 பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
மக்களின் "தன்ப்" காக தண்டிக்கப்படுகிறார்கள், அதாவது "தன்ப்" என்பது தண்டனை பெற்றுத் தருகின்ற ஒரு செயலாக இருக்கிறது.
8:52 (இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
இந்த வசனத்தில் மறுபடியும் மக்களின் "தன்ப்"காக அல்லாஹ் அவர்களை தண்டித்தார். மக்களின் "தன்ப்" என்ற பாவத்தை அல்லாஹ் ஏதோ சிறிய பிழையாக நினைக்காமல், அதற்கு தண்டனையை கொடுக்கிறார்.
8:54 ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
இவ்வசனத்தில் மறுபடியும் மக்கள் தங்கள் "தன்ப்"காக, இறைவனால் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள். இந்த குற்றம் செய்தவர்களை அல்லாஹ் அநியாயக்காரர்கள் பொய்யர்கள் என்று சொல்கிறார்.
9:102 வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
அலி தன் பின்குறிப்பில் இவ்விதமாக கூறுகிறார்: "சில மனிதர்களிடம் நல்ல குணங்கள் இருந்தாலும், அவர்கள் பலவீனமாக இருப்பார்கள், இதனால் தீய செயல்களை செய்வார்கள். அலி அவர்கள் இந்த "தன்ப்" ஐ "தீய செயல்கள்" என்று கூறுகிறார். "தீய செயல்கள் என்பது தெரியாமல் செய்யும் பிழைகளாக ஆகுமா?"
12:29 (என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்.
இந்த வசனத்தில், யோசேப்பை பாவத்தில் விழவைக்க முயற்சி செய்த பெண்ணைப் பற்றி படிக்கிறோம். ஆனால், அவர் மீது கற்பழிப்பு குற்றத்தை அதே பெண் பொய்யாக சுமத்தினாள். இதனால், அப்பெண்ணின் "தன்ப்" அல்லது பாவத்திற்காக மன்னிப்பு கோறும்படி அறிவுரை தரப்படுகிறாள். ஒரு வேற்று ஆணோடு உடலுறவு கொள்ள நினைக்கும் இப்பெண்ணின் பாவம், அறியாமல் செய்த பிழையா? இல்லை. இது மனிதனுக்கு, இறைவனுக்கு எதிராக செய்த பாவமாகும்.
12:97 (அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
இவ்வசனத்திலும், யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் "தன்ப்" ஐ மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுங்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் செய்த அந்த பாவம் என்ன? அவர்கள் யோசேப்பை கடத்திச் சென்று, அடிமையாக விற்றுவிட்டாரகள். அதன் பிறகு தங்கள் தந்தையிடம் பொய்யையும் சொன்னார்கள். இவர்கள் செய்த இந்த செயல்கள் ஏதோ தெரியாமல் செய்த சிறிய பிழைகளா? அல்லது ஞாபகம் இல்லாமல் தெரியாமல் செய்த தவறுகளா? இல்லை. இந்த செயல்கள் மிகவும் மோசமான பாவங்களாகும், இவைகள் பொறாமையினால் செய்த தீய செயல்களாகும்.
14:10 அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் "வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.
இந்த வசனத்தில் "தன்ப்" என்பது பல தெய்வ வழிப்பாட்டைக் குறிக்கிறது. விக்கிர ஆராதனை (பல தெய்வ வழிப்பாடு) மறதியில் செய்யும் சாதாரண செயலா? அவர்களின் "தன்ப்" பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றால் அவர்கள் நரக நெருப்பிலிருந்து தப்புவார்கள். இந்த பாவம் மன்னிக்கப்படவில்லையானால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
26:14 "மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).
இந்த வசனத்தில் மோசே பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் ஒரு "குற்றம்/தன்ப்" புரிந்ததாக கூறுகிறார். அவர் செய்த அந்த குற்றம் தான் என்ன? அவர் செய்தது ஒரு கொலையாகும். கொலை என்பது அல்லாஹ் கண்டும் காணதவர் போல இருந்துவிடும் அளவிற்கு சிறிய பிழை தான் என்று எந்த ஒரு இஸ்லாமியராவது சொல்லமுடியுமா?
28:78 (அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
இங்கு, ஒரு முழு தலைமுறையை அவர்கள் செய்த "தன்ப்" காக அல்லாஹ் அவர்களை அழித்தாராம். ஒரு சிறிய பிழைக்காகவா அல்லாஹ் ஒரு தலைமுறை மக்களை அழிப்பார்?
29:40 இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
மக்கள் செய்த குற்றமாகிய தன்ப்காக அவர்களை அல்லாஹ் பிடித்ததாக கூறுகிறார். அவர் எப்படி அம்மக்களை அழித்தார் என்பதை பார்க்கவும்:கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினார், பேரிடி முழக்கத்தை அனுப்பினார், பூமியினுள் அழுந்தச் செய்தார், சிலரை தண்ணீரில் மூழ்கடித்தார். மக்கள் செய்த இந்த "தன்ப்" தீயசெயல்கள் இல்லையா? "தன்ப்" என்பது அல்லாஹ் காணாதவர் போல இருக்கச் செய்யும் ஒரு சிறிய பிழையா? இல்லை...இல்லவே இல்லை. தன்ப் என்பது அல்லாஹ் மிகவும் கொடுமையாக தண்டிக்கும் பாவமாகும்.
40:11,12 அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர். (40:11) . (பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
இவ்வசனத்தில் மக்கள் தங்கள் பாவங்களை(தன்ப்) ஒப்புக்கொள்கின்றனர். இவர்களின் செய்த பாவம் எது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறார்? அல்லாஹ்வுடன் மற்றவர்களை சமமாக்கினதையே பாவம் என்று அல்லாஹ் கூறுகிறார். இப்படிப்பட்ட பாவத்தை "ஷிர்க்" என்று சொல்லப்படும். இந்த பாவம் மன்னிக்கப்படாது என்று பல இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.
40:21 இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
மக்களின் பாவங்களுக்காக (தன்ப்) அல்லாஹ் அவர்களை தண்டிக்கிறார். தன்ப் என்பது எப்படிப்பட்ட பாவம் என்றால், அல்லாஹ்விடமிருந்து இவர்களை காப்பாற்ற ஒருவர் தேவைப்படும் அளவிற்கு மிகவும் கொடுமையானது, ஆனால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இல்லை.
46:31 "எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
அல்லாஹ் மக்களின் பாவங்களிலிருந்து (தன்ப்) மன்னிப்பு அளித்து, தண்டனையிலிருந்து தப்பிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இறைவனின் பார்வையில் பாவத்திற்கு(தன்ப்) கடுமையான தண்டனை தரப்படவேண்டி இருக்கிறது.
61:12 அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
இந்த வசனத்தில் அல்லாஹ் அவரகளின் பாவங்களை (தன்ப்) மன்னிப்பாராம். அதன் பிறகு சொர்க்கத்தில் அவர்களை அனுமதிப்பாராம். அதாவது, தன்ப் என்ற பாவம் மன்னிக்கப்படாவிட்டால், அந்த சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
67:11 (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
இம்மக்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வார்களாம். ஆனால், இவர்களுக்கு மன்னிப்பு தரப்படாது. ஆகையால் இம்மக்கள் இவர்களின் பாவங்களினால், நரகத்தில் இருப்பார்கள்.
91:14 ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
மேலே உள்ள வசனத்தில், மக்கள் அந்த நபி ஒரு கள்ள நபி என்று கருதி அவரை நிராகரித்துவிட்டனர் மற்றும் அந்த விசேஷித்த ஒட்டகத்தை கொன்றுவிட்டனர். இவர்களின் இந்த "தன்ப் குற்றத்திற்காக" அல்லாஹ் என்ன செய்தார்? அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்கி முழுவதுமாக அழித்துவிட்டார். ஏன் இந்த தண்டனை அவர்களுக்கு? அவர்களின் "தன்ப்" என்ற குற்றத்திற்காக இந்த தண்டனை.
வாருங்கள் இப்போது சிறிது ஆராயலாம். "தன்ப்" என்ற வார்த்தை பாவம், குற்றம் மற்றும் தவறு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த "தன்ப்" என்ற பாவம்

செய்தவர்களை அல்லாஹ் என்ன செய்தார்?
அல்லாஹ் இப்படிப்பட்டவர்களை...

பூமியில் இராதபடிக்கு துடைத்துப்போட்டார்

அழித்துவிட்டார்

நரக நெருப்பில் போட்டார்

பயங்கரமான தண்டனையை அளித்தார்

கணக்கு கேட்டார்

பயங்கரமான புயலைக் கொண்டு அழித்தார்

பயங்கரமான தாக்குதலை கொடுத்தார்

பூமி அவர்களை விழுங்கும்படி செய்தார்

தண்ணீரில் மூழ்கும்படி செய்தார்

தண்டித்தார்

நரக நெருப்பில் தள்ளி வேதனையை அனுபவிக்கும் படி செய்தார்
"தன்ப்" என்ற பாவத்தை செய்தவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனைகளைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். இந்த "தன்ப்" என்ற பாவமானது அல்லாஹ் பார்த்தும் பார்க்காததுமாக விட்டுவிடக்கூடிய அளவிற்கு ஒரு சிறிய "பிழை", "தடுமாறுதல்"அல்லது "மறதியில் செய்த பிழை" என்று பொருள் தெரிகிறதா உங்களுக்கு?

இல்லை! நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் மேலே கண்ட தண்டனைகளை பார்த்தால், "தன்ப்" என்பது அல்லாஹ் மிகவும் தீவிரமாக தண்டிக்கும் ஒரு பாவமாக இருக்கிறது. அல்லாஹ்வின் பார்வையில் இது கண் ஜாடையாக‌ பார்த்தும் பார்க்காதது போல‌ விட்டுவிடுகின்ற சிறிய பாவமல்ல, இது மிகவும் கொடுமையான பாவமாகும். இதனை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்களா?

முக்கியமாக இதனை மறக்கவேண்டாம், அதாவது முஹம்மது "தன்ப்" என்ற பாவத்தை செய்துள்ளார். முஹம்மது தன்னுடைய அனைத்து "தன்ப்" காக மன்னிப்பு கோரும் படி அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டுள்ளார். தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்தால் தான் சொர்க்கத்தில் நுழைய முடியும் என்று முஹம்மது குர்ஆனில் கூறியுள்ளார். தன்ப் பாவங்கள் மன்னிக்கப்படாதவன் நிச்சயமாக நரகத்தில் செல்வான்.
முதல் பாகத்தின் முடிவுரை:அல்லாஹ் குர்‍ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை? குர்‍ஆன் சொல்வதா? முஹம்மது சொன்னதா? அல்லது இஸ்லாமியர்கள் நம்மிடம் சொல்வதா?

இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில், முஹம்மதுவின் பாவங்கள் பற்றிய ஹதீஸ்களையும் அவர் செய்த பாவங்களின் பட்டியலையும் காண்போம்.

ஆதார நூற்ப்பட்டியல்

[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.

[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at:

answering-islam.org/Gilchrist/Vol1/

[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England

[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.

[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.

[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.

[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.

[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"

[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.

[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.

[11] இக்கட்டுரையின் அனைத்து குர்‍ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)


பாலியல் (செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர் (Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ் (ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் 'நபி (ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1, அத்தியாயம் 5, எண் 268).
இந்த பாரம்பரியங்கள் எப்படி நம்பத்தகுந்ததாகும்? கவனிக்கவும் - அந்த காலகட்டத்தில் முகமது 20 அல்லது 25 வயது இளைஞராக இல்லை - இந்த வயதினரால் கூட இது முடியாத காரியமாக இருக்கும் - தன்னுடைய ஒன்பது மனைவிகளையும் அவர் அடையும் போது அவர் சுமார் 60 வயதுடைய மனிதராக இருந்தார். மேலும் இந்த பாரம்பரியங்களின் படி இது ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு இல்லை இது முகமதுவின் வழக்கமான செயலாக இருந்ததாம்.

இந்த பாரம்பரியங்களை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று விளக்கமளிக்கும் மற்றொரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது:
ஆயிஷா (ரலி) அறிவித்தார்

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (Sahih al-Bukhari பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765) .
முகமது உடலுறவில் ஈடுபடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று இந்த ஹதீஸ் கூறினாலும், உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை - முதலில் நாம் மேலே படித்த ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் வர்ணணையா அல்லது விளக்கமா?

கவனிக்கவும் - மேலும் இந்த பாரம்பரியம் (முகமதுவின் விருப்பமான மனைவி மூலமாக கொடுக்கப்பட்டது), ஒரு தடவையல்ல தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு என்று வலியுறுத்துகிறது.

தான் ஈடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த அநேக உடலுறவில் அவர் உண்மையில் ஈடுபடவில்லை என்றாலும், மேலேயுள்ள பாரம்பரியங்கள் முகமதுவின் மனதில் உடலுறவு (sex) முக்கியமான விஷயமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரப் பகுதிகளை வழங்குகிறது. 

இதன் விளைவுகள்:

இந்த சிறிய ஆய்வின் பயன் வெறும் முகமதுவின் செக்ஸ் வாழ்க்கையை பற்றிய விவரங்கள் மட்டுமே நமக்கு அறியத் தருகின்றன என்று இல்லாமல், அதற்கும் மேலாகச் சென்று அதிகமான விவரங்களை கொடுக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், 'ஆதாரப்பூர்வமான, மற்றும் நம்பத்தகுந்த உண்மையான" ஹதீஸ்கள் என்றழைக்கப்படும் இந்த ஹதீஸ்கள், முகமது ஏதோ ஒரு மாயையிலும், மனப்பிரம்மையிலும் பீடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.

இதுவரை நாம் பார்த்த விவரங்கள் உண்மையென்றால், உடனே மற்றொரு கேள்வி எழும்புகிறது: இஸ்லாமியப் பாரம்பரியத்தின் இன்னும் எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இந்த வகையைச் சார்ந்தவை?

இறையியல் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான இஸ்லாமுடைய பெரும்பாலான போதனைகள் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே முஸ்லீம்கள் தங்கள் நம்பிக்கையையும், வாழ்க்கையையும் முகமதுவின் ஏதோ மனப்பிரம்மை என்று சொல்லப்படுவதன் மீதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ?

முகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாக தொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. மேலும் பலரும் ஏற்றுக்கொள்ளுகிறபடி 'காபிரியேல் தூதன் வந்தார், வெளிப்பாடு அவர் மூலம் கொண்டுவரப்பட்டது" என்பதெல்லாம் ஒரு புத்திமாறாட்டமுள்ள மனதின் படைப்புகளா! உண்மைக்குப் பதிலாக மாயைகளாக இருந்தவைகளா? (If it is established that Muhammad's illusions are narrated as facts in the hadiths, this also raises doubts in regard to the Qur'an. What if some or all of the alleged "visitations of the angel Gabriel" and the "revelations that were brought down" by him were creations of an unstable mind, and have really been an illusion instead of a fact?)

இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை


ஒரு முஸ்லீம் ஆண் ஒரு கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றான், ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதியில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு இஸ்லாமியருடன் நடந்த‌ நேர்க்காணலை கேட்டது என் நினைவிற்கு வருகிறது. அந்த நேர்க்காணல் தொடங்கியதும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த இஸ்லாமியரிடம் “நீங்கள் திருமணமானவரா?” என்று பேட்டி எடுப்பவர் கேட்டார். இதற்கு அந்த இஸ்லாமியர் "இஸ்லாம் மிகவும் சகிப்புத்தன்மையும் சுதந்திரமும் கொண்டது, எனவே நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன்" என்று கூறினார். இஸ்லாம் பாகுபாட்டை அல்ல சமத்துவத்தை குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.

உடனே, பேட்டி எடுப்பவர் துரிதமாக "அப்படியானால் ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?" என்று கேட்டார். அந்த இஸ்லாமிய‌ விருந்தாளியின் உற்சாகம் சிறிது குறைந்து போனது. இஸ்லாம் அதை அனுமதிப்பதில்லை என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. வானொலி நிகழ்ச்சியாளர் அந்த விருந்தாளியிடம் “உங்களுடைய முதல் கூற்று கொஞ்சம் தவறாக வழிகாட்டுவதாக உள்ளது இல்லையா" என்று துருவி துருவி கேட்டார். அவர்கள் அதைப் பற்றி ஒரிரூ நிமிடங்கள் விவாதித்தார்கள். பிறகு, அந்த விருந்தாளியின் சிரமத்தை உணர்ந்து பேட்டியெடுப்பவர் வேறு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

ஒரு இஸ்லாமிய தளத்தின் கட்டுரைகள், கலப்புத் திருமணம் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறது:
ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு முஸ்லீம் அல்லாத ஒரு ஆணை திருமணம் செய்ய அனுமதியில்லை.

ஒரு முஸ்லீம் ஆணுக்கு ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் கீழ் அனுமதி உண்டு.

1) அந்தப் பெண் பெயரள‌வில் அல்லது தத்து எடுக்கப்பட்டதினால் அவள் ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணாக இருக்கக்கூடாது, இதற்கு பதிலாக‌, அவள் ஒரு உண்மையான யூத / கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த‌ பெண்ணாக இருக்கவேண்டும்.

2) அவள் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கோ அல்லது யூதமதத்திற்கோ மாறியிருக்கக் கூடாது.
ஏன் இந்த திருமணம் ஒரு பக்கமாக சாய்ந்து ஆண்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏழாம் நூற்றாண்டு அரபி கலாச்சாரம் பதிலளிக்கும். ஒரு பெண் திருமணம் ஆனவளாக இருந்தாலும் சரி, ஆகாமல் இருந்தாலும் சரி, குர்‍ஆன் அப்பெண்ணை மதிப்பதில்லை.

புதிய ஏற்பாடு இதைப்பற்றி என்னச் சொல்லுகிறது?

குர்‍ஆன்


சூரா 5: 5ல் குர்‍ஆன் சொல்கிறது.
… முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. …. (குர்‍ஆன் 5:5)
இந்த வசனத்தில் குறிப்பிட்டபடி ஒரு முஸ்லீம் ஆண், இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருக்கும் ஒரு கிறிஸ்தவ அல்லது யூதப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, ஆனால் ஒரு யூத, கிறிஸ்தவ மனிதன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. (இந்தக் கட்டுரையில் நான் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.)

இந்த சட்டம் வருவதற்கான காரணம் என்ன?

இஸ்லாம் ஒரு குலத் தலைவன் முறையை (Patriarchal) பின்பற்றுகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆகையால், குடும்ப உறவுகளில் மற்ற எல்லா காரியங்களில் ஆணின் ஆதிக்கமே ஓங்கியிருக்கும். உதாரணமாக சூரா 4:34 சொல்லுகிறது “ஒரு கணவன் தன் மனைவியை அடிக்கலாம்”, ஆனால் எந்த வசனத்திலும் மனைவி கணவனை அடிக்கலாம் என்று குர்‍ஆன் சொல்லுவதில்லை - குடும்பத்தில் கணவன் மனைவியை எவ்வளவு துன்புறுத்தி கொடுமைப்படுத்தினாலும் சரி, மனைவிக்கு இந்த உரிமையில்லை.

ஆரம்ப காலத்தில் முஹம்மது யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மரியாதை கொண்டு இருந்தார் என்பது உண்மை தான். ஆனால், பிறகு தன் வாழ்நாட்களில் அவரே அவர்களுக்கு எதிராக மாறினார், இதனை இந்த இரண்டு கட்டுரைகள் (Muhammad and the Jews, Islamic Crusades vs. Christian Crusades) விளக்குகின்றன. எனவே இதன்படி ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தில் ஒரு அரபு மனிதன் தன்னுடைய மனைவி அல்லது மனைவிகள் மீது அதிகாரம் செலுத்தலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன் இஸ்லாமிய மனைவி மீது அதிகாரம் செலுத்தக் கூடாது.

முழு மனித இனத்திற்கும் இஸ்லாம் தான் இறுதியான சிறந்த மார்க்கம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது, ஒரு முஸ்லீம் ஆண் தன் அடிபணிந்த மனைவியை மதம் மாற்றலாம். ஒரு முஸ்லீம் தீவிர மதப்பற்றுள்ளவனாக இருந்தால் அவனை எந்த பெண்ணாலும் மாற்ற முடியாது என்று ஒரு வேளை முஹம்மது த‌ன் மனதில் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கும் ஒரு முஸ்லீம் தீவிரமாக இஸ்லாமை பின்பற்றும் நாட்டைச் சார்ந்தவனாக இருந்தால் அல்லது தீவிர இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் கூட‌ இது உண்மையே.

எனவே கிறிஸ்தவ பெண்கள் ஒரு முஸ்லீம் மனிதனைத் திருமணம் செய்வது பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாம் ஆண்களுக்கு கொடுக்கும் அதே உரிமைகளை பெண்களுக்கு கொடுப்பதில்லை. உண்மையில் பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்களே என்று குர்‍ஆன் தெளிவாக கூறுகிறது.

இன்னும் எதையும் மூடி மறைக்காமல் மழுப்பாமல் நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், மற்றும் உண்மையைச் சொல்லவேண்டுமானால், “இஸ்லாம் ஒரு கொடூரமான எஜமான்-அடிமை தத்துவம் கொண்ட” ஒரு மதமாகும். முஸ்லீம் ஆண்கள் தங்கள் பெண் அடிமைகளோடு உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஏன் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக‌ இல்லை என்பதற்கான முக்கியமான பத்துக் காரணங்களை இந்த தமிழ் கட்டுரை விளக்குகிறது. இயேசு நமக்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த நெறியை காண்பித்து ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகும், ஏன் இஸ்லாமிய சட்டங்கள் மித மிஞ்சியதாகவும் இரத்தம் சிந்தச் செய்யக் கூடியதாகவும் மற்றும் கொடூரமானதாகவும் இருக்கிறது என்பதற்கான பத்து முக்கிய காரணங்களை இந்த கட்டுரை விளக்குகிறது. இறுதியாக பெண்களை ஒடுக்கி அவமானப்படுத்தும் குர்‍ஆனின் பத்து முக்கிய சட்டங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. முழு உலகமும் அறிந்திருக்கிறபடி, உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் அனேக‌ நிகழ்வுகள் நமக்கு “இஸ்லாம் பெண்களை மதிக்கவில்லை” என்பதை நிருபிக்கின்றன.

ஆகையால், சாதாரண மனிதனாக இருந்து, பெரும்பான்மையான நேரங்களில் மிகவும் கொடுமையானவராகவும், கடினமுள்ளவராகவும், பெண்களை வெறுத்தவராகவும் இருந்த, மரிக்கும் தூதுவராக இருந்த முஹம்மதுவிற்காக (சூரா 3:144, 39:30, 41:4), மக்களை விடுதலையாக்குகிறவராகவும், இறைவனின் அன்பை தருபவராகவும் இருந்த தேவக் குமாரனை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கக்கூடாது. இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை.

ஒரு கிறிஸ்தவ‌ பெண் ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்ட பிறகும், அவள் இயேசு தான் தேவகுமாரன் என்றும், அவர் தான் மேசியாவாகிய தேவன் என்றும் நம்பிக்கொண்டு இருந்தால், குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களாக உள்ள ஹதீஸ் சட்டங்களின் படி அவள் ஒரு தவறான நம்பிக்கைக் கொண்டு இருப்பவளாகவும் மற்றும் அவள் "காஃபிராக"வும் கருதப்படுவாள்.

மேலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்களா அல்லது முஸ்லீமாக அல்லது மதச்சார்பற்றவர்களாக இருப்பார்களா? இஸ்லாம் உறுதியாக பின்பற்றப்படும் போது அதற்கான பதில் தெளிவாக உள்ளது.

எனவே இது எப்படிப்பட்ட திருமணமாக இருக்கும்? கணவனுக்கும் மனைவிக்கும் இறைவனுக்கும் இடையில் காணப்படும் ஆன்மீக வாழ்வு மற்றும் தொடர்பு எப்படி இருக்கும்?
புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாடு, திருமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு துணையை தெரிந்தெடுப்பதில் சமமான நிலைப்பாடு கொடுத்து தொடங்குகிறது.

புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் 7:39 சொல்லுகிறது, கிறிஸ்தவ பெண் ஒரு கிறிஸ்தவ ஆணையே மணம் முடிக்கவேண்டும் (ஆணும் அப்படியே) (மேலும் 2 கொரிந்தியர் 6:14-18 வசனங்களை படிக்கவும்). முதன் முதலில் இந்த புனித ஆலோசனையை படிக்கும் போது, இது மிகவும் கட்டுப்பாடு கொண்டதாக தெரியும், ஆனால் சற்று ஆழமாக பார்க்கும் போது இதில் அதிக ஞானம் இருப்பதை காணமுடியும். திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தங்களுடைய ஒரே விதமான நம்பிக்கை மற்றும் கொள்கையுடன் தொடங்கும் போது தங்கள் துணையை மற்ற நம்பிக்கைக்கு மாற்றவேண்டிய பெரும் நெருக்கத்தை தவிர்க்க முடிகிறது. துணையில் ஒருவர் மற்றொருவருக்கு சுவிசேஷம் சொல்லி ஆயத்தப்படுத்த வேண்டுவதில்லை. ஒருவர் இன்னொருவரைக் குறித்து "இவள்/இவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறார் என்றோ, அல்லது காஃபிர் என்றோ" கருதவேண்டிய அவசியமிருக்காது.

பைபிள் காட்டும் கிறிஸ்தவத்தில் ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒரே சரீரமாக மாறுவதற்கு முன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இயேசு கிறிஸ்துவோடு ஆழமான ஆவிக்குரிய உறவில் பலப்படவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் இறைவனோடுள்ள அவர்களுடைய ஆழமான ஆன்மீக‌ நெருக்கமானது அவர்களுடைய தனிப்பட்ட‌ நெருக்கத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

மேலும் இந்த ஆவிக்குரிய சமத்துவமானது அவர்களுக்குள் உள்ள எல்லா அதிகாரப் பிரச்சனைகளையும் எடுத்துப்போடுகிறது. மார்க்க சம்பந்தமான காரியங்களில் ஏற்கனவே மனைவி கணவனோடு ஒருமனப்பட்டு இருப்பதினால், கட்டுப்படுத்துதவற்காகவும் கணவன் மனைவி மீது மதம் சம்மந்தப்பட்ட எந்த சட்டங்களையும், பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை.

ஒருவகையில் சொல்லவேண்டுமானால், இஸ்லாம் கூட இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை அங்கீகரிக்கிறது, அதாவது ஒரு முஸ்லீம் பல தெய்வ வழிபாடுகளை பின்பற்றும் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற தடை உள்ளது (சூரா 2:221). பல தெய்வ வழிப்பாட்டுக்கும் இஸ்லாமுக்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இதே போல, இஸ்லாமும் கிறிஸ்தவமும் பல தெய்வ வழிப்பாட்டு மார்க்கமாக இல்லாமல் இருந்தாலும், இவ்விரண்டிற்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

முக்கியமான வித்தியாசமாக கூறவேண்டுமானால், கிறிஸ்தவத்தில் அடிப்படையாக உள்ள மற்றும் மாற்றியமைக்கமுடியாத கோட்பாடாக உள்ள, இயேசுவின் தெய்வத்தன்மையை முஹம்மது மறுத்துள்ளார். இது தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும். இயேசு ஒரு சாதாரண நபி என்று இஸ்லாம் தவறாக சொல்கிறது. புதிய ஏற்பாட்டின் எல்லா இடங்களிலும் இயேசுவின் தெய்வத்துவம், குமாரத்துவம் உறுதிசெய்யப்படுகிற‌து.

இதயத்தில் உணரக்கூடிய அளவிற்கு முஸ்லீம்க‌ள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை ஏனென்றால் அவர்கள் இயேசுவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏறறுக்கொள்வதில்லை. உண்மையில் இஸ்லாமிய போதனை பரிசுத்த ஆவியை தவறுதலாக காபிரியேல் தூதனுக்கு சமமாக குறைத்துள்ளது. இதன்படி ஒரு முஸ்லீமுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே திருமணம் சமாதானமானதாக இருக்காது. எனவே ஒரு கிறிஸ்தவளுக்கு இது மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தன் குடும்ப வாழ்வில், ஆண் ஆதிக்கம் தலை தூக்கும், அப்போது அவளது வாழ்வு இன்பமானதாக இருக்காது.

மனைவிகளின் கை குடும்பங்களில் ஓங்குகிறது என்று அல்லது அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள் என்று இஸ்லாமிய கணவன் நினைத்தால், அவன் தன் மனைவிமார்களை அடிக்க அவனுக்கு குர்‍ஆன் (சூரா 3:43) அதிகாரம் கொடுக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறை காரணங்கள் ஒரு புறமிருக்க, ஒரு கிறிஸ்தவன் புதிய ஏற்பாட்டை சரியாக புரிந்து கொண்டால், அவன் அல்லது அவள் ஆவிக்குரிய மற்றும் இறையியல் காரணங்களுக்காக கண்டிப்பாக ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்யக் கூடாது.

ஒரு கிறிஸ்தவ தம்பதிகள் ஆவிக்குரிய ஒற்றுமையை காத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய பழக்க வழக்கங்களில் கிறிஸ்துவின் அடியவர்களாக வளர்க்க‌வேண்டும்.
முடிவுரை

என்னுடைய விமர்சனங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான விமர்சனங்கள் அல்ல, மாறாக இஸ்லாமின் மத அமைப்புச் சட்டத்திற்கும், அதன் ஆரம்பகால‌ வரலாற்று வன்முறைகளுக்கும், முஹம்மது தன் சொந்த சமுதாயத்தை உருவாக்கிவிட்ட பிறகு தொடாந்த ஆரம்பகால‌ வன்முறைகளுக்கும் எதிரானதாகும்.

இஸ்லாம் பற்றிய உண்மைகள் நிச்சயம் வெளியே வரவேண்டும்.

இந்த கட்டுரை இனத்தைப்(Race) பற்றி சொல்வதற்காக எழுதப்படவில்லை. கிறிஸ்தவமும், இஸ்லாமும் வெவ்வேறான‌ இனத் திருமணங்களை அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு வெள்ளைக் கிறிஸ்தவன் ஒரு கருப்பின கிறிஸ்தவளை திருமணம் செய்யலாம், எந்த பிரச்சனையும் இல்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப்பெற்று, இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக அடியவர்களாக இருக்கவேண்டும்.

இந்த கட்டுரையானது நற்குணங்கள் மதிப்பீடுகள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் பற்றியதாகும். முக்கியமாக இது இயேசுவுடன் நம்முடைய உறவைக் குறித்ததாகும். அவரோடு நல்ல உறவு இல்லாமல் இருந்தால் அது மிகவும் துக்ககரமானது.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் மதசம்பந்தமான திருமணத்தில் உள்ள வித்தியாசம் எளிமையாது.

முஸ்லீம் ஆண்கள் கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம்செய்ய அனுமதியில்லை. எனவே இஸ்லாமின் “திறந்த மனப்பான்மை" “சகிப்புத் தன்மை" மற்றும் “இனபாகுபடற்றது" என்று சொல்வதெல்லாம் ஒருவழிப் பாதையாகும், அதாவது மாய்மாலமாகும். இஸ்லாமிய‌ ஆண்கள் தான் எப்போதும் சர்வ அதிகாரமும் செலுத்துபவர்கள். ஆனால், இஸ்லாமியர்களில் சிலர் ஆண் ஆதிக்கம் செலுத்தாதவர்களாகவும், இன்னும் சிலர் நற்குணமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இருந்த போதிலும் அவர்கள் குர்‍ஆனை பின்பற்றுவார்களென்றால் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் 4:34ல் சொல்லப்பட்டதின் படி, மனைவிகளை அடிக்க அதிகாரம் பெற்று, ஆண் ஆதிக்க அதிகாரத்தை பிரயோகிப்பார்கள்.

முஸ்லீம் மனிதன் - வீட்டிற்குத் தலையாக இருந்து - இஸ்லாமை பின்பற்றும் போது , குழந்தைகள் முஸ்லீம்களாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அந்தக் குடும்பம் சரியான ஐக்கியத்தில் ஒருமனத்தில் இருக்காது.

கிறிஸ்தவம் அதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது, ஒரு கிறிஸ்தவ திருமணத் தம்பதிகள் சமமாக கிறிஸ்துவின் ஆவிக்குரிய குடும்பத்தில் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்படி அவர்கள் ஆழமான எந்த இறையியல் வித்தியாசங்களுக்கா கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒற்றுமையோடு அதை துவக்குகிறார்கள். மனைவி வேறு மார்க்கத்தை பின் பற்றுகிறாளே என்று ஆண் கவலைப் படவேண்டியதில்லை. ஆணுக்கு தன்னுடைய ஆண் ஆதிக்க‌ அதிகாரத்தை பயன்படுத்தவேண்டிய‌ அவசியமில்லை குடும்பத்தில் நிலவிக்கொண்டு இருக்கும் ஒருமனத்தை அமைதியை காத்துக்கொண்டால் போதும். பிள்ளைகள் இயேசுவின் சிறிய அடியார்களாக கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படுகின்றனர். அதினிமித்தம் அந்த் குடும்பம் மிக இணக்கமாக காணப்படும்.

கிறிஸ்துவில் குடும்பங்கள் இணக்கமாக ஒற்றுமையாக‌ இருக்கிறது. இஸ்லாமிய கலப்புத் திருமணங்களில் குடும்ப வேறுபாடுகள், உயர்வு தாழ்வுச் சண்டைகள் காணப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? WHAT DO CHRISTIAN BELIEVE?

தேவன் பற்றிய ஏழு விவரங்கள் (Seven Things About God):


1. தனிச்சிறப்புமிக்க "தேவன் ஒருவரே" என்று நாங்கள் நம்புகிறோம். பைபிள் இப்படியாகச் சொல்கிறது (உபாகமம் 6:4): இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
2. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் "தேவன்". தன்னுடைய வார்த்தையினால் இவைகள் அனைத்தையும் உருவாக்கினார். பைபிள் சொல்கிறது: (ஆதியாகமம் 1:3): தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவருடைய வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது.
3. தேவனால் படைக்கப்பட்டவர்களாகிய நாம் எப்படி தேவனை அறிந்துக்கொள்ள முடியும்? மிகவும் சிறியவர்களும் அற்பமானவர்களாகிய நாம் எப்படி தேவனுடைய சிந்தனைகளை அறிந்துக்கொள்ள முடியும்?

நம்மால் முடியும் - தேவன் தன்னை வெளிப்படுத்த சித்தமானதால் தான் நம்மால் அவரை ஓரளவிற்கு அறியமுடிகிறது. அவர் தன்னை வெளிப்படுத்தும் தேவனாக இருக்கிறார். (உபாகமம் 29:29) மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

தேவன் தன்னைப்பற்றி எவைகளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்?
4. அவர் பரிசுத்தமானவர் - அவர் அப்பழுக்கற்றவர். அவரிடம் எந்த ஒரு குறையும் இல்லை. அவருக்கும் பாவத்திற்கும் அல்லது தீய சிந்தனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆபகூக் 1:13ம் வசனம் சொல்கிறது, "தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே;..."
5. அவர் நீதியுள்ளவர் - இதன் பொருள் என்னவென்றால், தீமை செய்யும் எல்லாரும் தண்டிக்கப்படவேண்டும் என்பதாகும். இதைப் பற்றி மக்கள் சில நேரங்களில் குழம்பி விடுகின்றனர். நீதியும் இரக்கமும் ஒன்றல்ல, இவை இரண்டும் வெவ்வேறானவை ஆகும். நீதி என்றால், நீங்கள் சட்டத்தை மீறினால், கண்டிப்பாக நீங்கள் அபராதம் செலுத்தியே ஆகவேண்டும் என்பதாகும்.

தேவன் தன் இயற்கையான குணமான பரிசுத்தத்தை விட்டுக்கொடுக்கமாட்டார். தவறு செய்யும் எல்லாரையும் அவர் தண்டிப்பார்.

தேவ‌ன் ந‌ம்முடைய‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எல்லாம் தராசின் ஒரு தட்டில் வைத்து, ந‌ம்முடைய‌ எல்லா தீய‌ செய‌ல்க‌ளை அடுத்த தட்டில் வைத்து, எந்த‌ ப‌க்க‌ம் அதிக‌ க‌ன‌ம் உள்ள‌து என்று பார்ப்பார் என்று பொருள் அல்ல‌. ஒரு எடுத்துக்காட்டுக்காக: நான் உங்கள் சகோதரனை கொலை செய்துவிட்டால், ஒரு நீதிபதி, "பரவாயில்லை, போகட்டும், நாம் இவனை விடுதலை செய்துவிடலாம், ஏனென்றால், இவன் தன் வாழ்நாட்களில் நிறைய நல்ல செயல்களை செய்துள்ளான்" என்று தீர்ப்பு வழங்குவாரா? அப்படி சொல்வாரானால், அவர் ஒரு நீதியுள்ள நீதிபதியாக இருக்கமுடியுமா? மக்கள் செய்யும் தவறுகளை பார்க்காதவாறு தேவன் தன் கண்களை மூடிக்கொண்டு இருக்கமாட்டார். தேவன் தீமையை சகிப்பதில்லை.

ஆனால், நாம் அனைவரும் தூசுக்கு சமமானவர்கள் என்று தேவனுக்குத் தெரியாதா? எப்படியென்றால், நாம் தவறுகள் செய்ய பலவீனமானவர்கள் என்று தேவனுக்குத் தெரியாதா? பழுதே இல்லாத ஆணோ அல்லது பெண்ணோ யாரும் இல்லை. ஆம், இது நமக்குத் தெரியும். விஷயம் இப்படி இருக்கும் போது, நாம் செய்யும் தவறுகளை தேவன் கவனிக்காமல் விட்டுவிடுவார் என்று அர்த்தமா? தேவன் பரிசுத்தமானவர் மற்றும் அவர் நீதியுள்ளவர், ஆகையால், நம் தவறுகளை அவர் நிச்சயமாக கவனிப்பார். இவைகளை நாம் புரிந்துக்கொண்டோமானால், நாம் எவ்வளவு மோசமான நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியும்.

நாம் நேர்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் என்றுமே சுயநலமுடன் அல்லது தவறான சிந்தனையை உடையவர்களாக இல்லை என்றும், நாம் பொய்யே ஒரு முறை கூட சொல்லவில்லை என்றும் சொல்லமுடியுமா? பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நமக்கு சுத்த இதயம் உள்ளது என்று யார் சொல்லமுடியும்? இனிமேல் நாம் த‌வ‌றுக‌ளே செய்யாம‌ல் வாழ்வோம் என்று சொன்னாலும், க‌ட‌ந்த‌ கால‌ வாழ்க்கையில் ந‌ட‌ந்த‌ த‌வ‌றுகளுக்கு நாம் சொல்லும் ப‌தில் என்ன‌? தேவ‌னுக்கு நியாப‌க‌ ச‌க்தி குறைவாக‌ இருக்குமா? ந‌ல்ல‌ செய‌ல்க‌ளைச் செய்வ‌து, தீய‌ செய‌ல்க‌ளை துடைத்துவிடுமா? இல்லை என்ப‌து தான் ப‌தில்.

நம்மில் ஒவ்வொருவரும் தேவனின் நியாயத்தீர்ப்பிற்கும், நரக நெருப்பிற்கும் உள்ளாக வேண்டியவர்கள். இது ஒன்றும் "என்னை மன்னித்துவிடும், அடுத்த முறை நான் தவறுகள் செய்யாமல் இருக்க முயற்சி செய்கின்றேன்" என்று ஒரு சின்ன ஜெபம் செய்தால் தீர்ந்துவிடும் காரியம் அல்ல. இப்படி செய்வதில் எந்த நியாயமும் இல்லை.

ஒரு எடுத்துக்காட்டு: ஒரு சாலையில் சிகப்பு விளக்கு எரிந்துக்கொண்டு இருக்கும் போது, நான் நிற்காமல் சென்றுக்கொண்டு இருந்தால், ஒரு அதிகாரி என்னை நிறுத்தினால், "அய்யா, நான் இனி என் வாழ்நாட்களில் எப்போதும் பச்சை வண்ண விளக்கு எரிந்த பின்பு செல்கின்றேன்" என்றுச் சொன்னால், இதனால் ஏதாவது நன்மை விளையுமா? இப்படியாக நாம் சொல்வது ஒரு அதிகாரியிடம் வேலை செய்யாது அல்லது இதனால் பயன் இல்லை என்று இருக்கும் போது, பரிசுத்தமான மற்றும் நீதியான தேவனிடம் எவ்வளவு குறைவாக இது வேலை செய்யும். இவ்விதமாக‌ எழுதப்பட்டுள்ளது, (ரோமர் 6:23) "பாவத்தின் சம்பளம் மரணம்".

நம் எல்லாருக்கும் ஒரு நற்செய்தி என்னவென்றால், கதை இதோடு முடியவில்லை.
6. தேவன் சர்வவல்லவர் (God is Almighty) - தேவன் எதை செய்யவிரும்புவாரோ அதை அவர் செய்ய வல்லவர். எரேமியா 32:17 வசனம் சொல்கிறது "ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையம் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை".

அவருக்கு எந்த எல்லையும் இல்லை, அவருடைய வல்லமைக்கும் எல்லையில்லை.

தேவன் தன் நிலையில் சரியாக உள்ளார். தேவன் முரண்படுவதில்லை. அவர் தன் பரிசுத்தம் மற்றும் நீதியான குணத்திற்கு எதிராக முரண்படுவதில்லை. அவர் தன் சட்டத்தை தானே மீறுவதில்லை.

நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கட்டும்: "நீங்கள் ஒருவரைப் பற்றி எப்படி அறிந்துக்கொள்கிறீர்கள்?" மற்றவர்களை வெளிப்புறமாக நீங்கள் காணுவதினால் அவர்களைப் பற்றி ஓரளவிற்குச் சொல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்றும் அவர்கள் உள்ளங்களில் மறைந்திருப்பது என்ன என்பதும் உங்களால் சொல்லமுடியாது. நாம் ஒருவரின் வார்த்தைகளை கேட்கவேண்டும். அவர்கள் இதயங்களில் என்ன மறைந்துள்ளது என்றும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்களின் வார்த்தைகள் தான் நமக்கு சொல்லும்.

நான் என் விருப்பங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு பல வழிகள் உள்ளன. என் சிந்தனைகளை எழுதி உங்களுக்கு ஒரு கடிதமாக அனுப்பலாம். அதை நீங்கள் படிக்கலாம். ஆனால், உங்களுக்கு சில கேள்விகள் எழலாம், அல்லது என் கடிதத்தில் உள்ளவைகளை நீங்கள் புரிந்துக்கொள்ளாமல் இருக்கலாம். இதற்கு ஒரு சரியான வழி என்னவென்றால், என்னை நன்றாக அறிந்த என் நண்பனிடம் அந்த கடிதத்தை கொடுத்து உங்களிடம் அனுப்புவது தான். என் நண்பன் அந்த கடிதத்தில் நான் என்ன சொல்லியுள்ளேனோ அதை உங்களுக்கு விவரமாக விளக்குவார். இதைவிட ஒரு நல்ல வழிமுறை என்னவென்றால், நான் உங்களுக்கு தொலைபேசி மூலம் நேரடியாக தொடர்பு கொள்வது தான். இவைகள் எல்லாவற்றையும் விட சிறந்த முறை என்னவென்றால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான் வந்து, உங்களோடு நேரடியாக பேசுவது தான்.

தேவனுடைய வார்த்தையின் மூலமாகத் தான் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது. அவரது வார்த்தைகள் நாம் கற்பனை செய்யவும் புரிந்துக்கொள்ளவும் முடியாத அளவிற்கு வல்லமையுடையது. நாம் அவரை அறியவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் தன் வார்த்தைகளை சட்டமாக நமக்கு கொடுத்துள்ளார். அவர் தன் வார்த்தைகளை விளக்குவதற்கும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் தீர்க்கதரிசிகளை அனுப்பியுள்ளார். இப்படியாக எழுதப்பட்டுள்ளது: (எபிரேயர் 1:1) "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,"

தேவன் மிகவும் வல்லமையுள்ளவர், அவரால் முடியாதது ஒன்றுமில்லை. தேவன் விரும்பினால், அவருடைய வார்த்தையை நம்மிடம் அனுப்பமுடியும், அந்த வார்த்தை நம் முகத்திற்கு நேராக வரமுடியும். அவரது வார்த்தை மனிதனாக வரமுடியும்.
7. தேவன் அன்பாக இருக்கிறார் (God is LOVE) - தேவன் நம்மில் அன்பு கூறுகிறார் மற்றும் நாம் அவரை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார், ஆகையால், அவரது வார்த்தையை மனிதனாக அனுப்பினார்.

இப்படியாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது: (யோவான் 1:1, 14) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். அவர் பரிசுத்தமான தேவனுடைய வார்த்தையாக உள்ளார். ஆபிரகாமையும் அவரது மகனையும் நியாபகம் செய்துக்கொள்ளுங்கள் (ஆதியாகமம் 22: 1-14). ஆபிரகாம் தேவனுக்கு கீழ்படியவேண்டும் என்றும் அவருக்கு தன்னை சமர்பிக்கவேண்டும் என்றும் விரும்பினார். அவர் தன் மகனை எடுத்து தேவனுக்கு பலியிட கூட தயங்கவில்லை, போகும் வழியில் அவரது மகன், "நெருப்பும் கட்டையும் உள்ளது, ஆனால், பலியிட ஆடு எங்கே?" என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம் பதில் அளித்தார், "தேவன் அவரே பலிக்கான ஆட்டை தருவார் என்றுச் சொன்னார்" ஆபிரகாம் தன் மகனை பலிபீடத்தில் கிடத்தி, கத்தியால் பலியிட முயற்சித்த வேளையில், தேவன் அவரை அழைத்தார், "ஆபிரகாமே, உன் மகன் மீது உன் கையை வைக்காதே?" மற்றும் ஆபிரகாம், தலையை ஏறெடுத்து பார்க்கும் போது, தேவன் தயார்படுத்தி வைத்திருந்த ஒரு ஆட்டை கண்டார், அந்த ஆடு முட்களின் இடையில் மாட்டிக்கொண்டு இருந்தது, அதை எடுத்து ஆபிரகாம் தேவனுக்கு பலியிட்டார். அவரது மகன் தப்பிக்கப்பட்டார்.

"இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:16) என்று பைபிள் அழைக்கிறது. தீர்க்கதரிசியான யோவான் "இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று பறைசாற்றும் போது, இதன் பொருள், இயேசு நம்மை அடிமைத்தனத்திலிருந்து விலைசெலுத்தி விடுவித்துள்ளார் என்பதாகும். தேவனுடைய வார்த்தை (இயேசு) நம் மீது வைத்த அன்பினாலே, நமக்கு வரவேண்டிய தண்டனையை, நியாயத்தீர்ப்பை தன் மேல் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், மரித்தவர் அப்படியே இருந்துவிடவில்லை, அப்படி அவர் இருக்கவும் முடியாது, அவர் வெற்றியுள்ளவராக உயிரோடு எழுந்தார், மற்றும் மரணத்தை ஜெயித்தார்.

நாம் தேவனை அறிந்துக்கொள்வது எப்படி?

நாம் தேவனை அறிந்துக்கொள்வது எப்படி? இது சுலபம் அல்ல - இதற்கு நமக்கு தாழ்மை வேண்டும்.

நாம் தூசுக்கு சமம் என்றும், நமக்கு சுத்தமில்லாத இதயம் உண்டென்றும், மற்றும் நம்முடைய செயல்களினால் நமக்கு நரகம் தான் கிடைக்கும் என்றும் நாம் உணர்ந்து தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளவேண்டும்.

தேவன் நமக்காக என்ன செய்து இருக்கிறார் என்பதை உணர்ந்து நாம் அதை தாழ்மையோடு அங்கீகரிக்கவேண்டும். அவர் நம் அழுக்கு நீங்க நம்மை கழுவுவார், நம்மை பரிசுத்தவான்களாக மாற்றுவார், மற்றும் தன்னுடைய ஆவியை நமக்கு உதவி செய்யும்படி அனுப்பி, நாம் ஒரு கீழ்படிதல் உள்ள வாழ்க்கையை வாழ உதவிபுரிவார்.

தேவனை நாம் அறிந்துக்கொண்டால் நமக்குள் ஒரு விடுதலை மற்றும் எல்லையில்லா ஆனந்தம் உண்டாகும். தேவன் ஒருவரே, அவர் தான் உலகத்தைப் படைத்தவர், அவர் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்தியவர், அவரே பரிசுத்தர், நீதியுள்ள நியாயாதிபதி, அவர் சர்வவல்லவர் மற்றும் அன்பானவர்.

அவர் நம்மை தன் வேலைக்காரர்கள் என்று அழைப்பதில்லை, அதற்கு பதிலாக "பிள்ளைகள்" என்று நம்மை அழைக்கிறார். இயேசு சொல்கிறார் (யோவான் 15:15) "இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்....".

இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது (யோவான் 1:12), அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! Quran or Qurans?!


இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம் (Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)

2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)

3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)
இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்க வேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம் (ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
மூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji'faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
நான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)

2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹ‌க‌ம் + அஹ்ம‌த் பின் ஃப‌ரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)

3. அல்ஹ‌ஸ‌ன் அல்ப‌ஸ்ஸ‌ரி: அபோ ந‌யிம் அல்ப‌ல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na'im Albalkhi + Aldori)

4. அலாம‌ஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய் (Ala'mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
வித்தியாசம் இப்படியாக உள்ளது:
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)

2. தொனியில் வித்தியாசம் (tone - harkat)

3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A'rab - Arabic grammar)

4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL)

5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)

6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல் (adding or removing words)
நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்ல முடியாது.

முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக்கூடிய “தாய் குர்‍ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.

"தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள். முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.) நான் என்ன சொல்லவருகிறேன்?

சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.
1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahaba
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihaba
* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for al-Zamakhshari:
He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'haba
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25
[English translation based on the one done by Yusuf Ali.]
* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

 இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit
* ஹம்ஜா, அல்மிஷ்:
And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat
* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat
* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:
And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat
* அபோ நஹிக், அபோ ஹை:
And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt
* அலேரப் a book for Alnahas:
And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit
* மஸ்ரோக்
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit
* அபோ ஹையா:
And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt
* அபோ ஹையா
And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt
* அபோ ஹையா
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat
* அபோ அல்ஸ்மல்:
And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt
3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]
* ஜித் பின் அலி:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, 'I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being'
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman
* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten
* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten
* அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten

இயேசுவா (அ) முஹம்மதுவா: இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? Jesus or Muhammad: Who is God's True Seal of Prophethood?


முஹம்மது, இறைவனின் நபித்துவ முத்திரையாகவும், அதனால் மனித குலத்திற்கு இறுதித் தூதராகவும் இருப்பதாகக் குர்‍ஆன் மேன்மை பாராட்டிக் கொள்கிறது.
"முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.." சூரா: 33:40
அனேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றி மக்களை ஏமாற்றுவார்கள் என கர்த்தராகிய‌ இயேசு கூறியதைக் காரணம் காட்டி, இதனால், இயேசுவிற்குப் பின் மற்றுமொரு உண்மையான தீர்க்கதரிசி வந்தாகவேண்டுமென்று இஸ்லாமியர்கள் ஆணித்தரமாக வாதிடுகின்றனர். கிறிஸ்துவிற்குப் பின் எந்த‌ தீர்க்கதரிசிகளும் இல்லையெனில் இயேசு, கள்ளத்தீர்க்கதரிசிகளை வேறுபடுத்திக்காட்டும் வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு எந்தத் தீர்க்கதரிசியும் இல்லை எனச் இயேசு சுருக்கமாகவே சொல்லியிருக்கலாம் என இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். (பார்க்கவும்: மத்தேயு 7:15-20, 24:23-26)

இஸ்லாமியர்களின் இத்தகைய வாதத்தில் உள்ள பிழை என்னவெனில், இவ்வாதம் பரிசுத்த‌ பைபிளின் முழுப் பிண்ணனியையும் காண மறுப்பதே ஆகும். உதாரணமாக, தமது வார்த்தைகளையும் செயல்களையும் உறுதிப்படுத்திக் காட்ட தேவன் தமக்கு அவரின் சொந்த அடையாள முத்திரையை வழங்கியிருப்பதாக இயேசு சொல்லியிருக்கிறார்.
"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." யோவான் 6:27

"Do not work for food that spoils, but for food that endures to eternal life, which the Son of Man will give you. On him God the Father has placed HIS SEAL OF APPROVAL." John 6:27
இதே விவரம் வேறு இடங்களிலும் தேவனால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. யோவான் 5:36-38

"நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்” யோவான் 8.:16-18

"பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்." யோவான் 10: 36-38

"அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.” யோவான் 14: 9-11
தேவன் கொடுத்த அங்கீகாரத்தில், இயேசு வலியுறுத்தியவைகளில் ஒன்று “கிறிஸ்து தான் இறுதித்தூதர் (Final Messanger) என்கின்ற உண்மையாகும்”. இதன் முழு அர்த்தம் என்னவெனில், கர்த்தராகிய‌ இயேசு தான் தேவனின் அனைத்துக் காரியங்கள் குறித்த இறுதி மற்றும் ஒரே விளக்கம் என்பதேயாகும். (Part of Jesus' claims, which God has given his approval to, includes Christ's statement that he is the final messenger. This essentially means that the Lord Jesus is God's final and only perfect commentary in relation to the things pertaining to God:)
"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்று போட்டார்கள். அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்." மாற்கு 12:1-8

தேவ‌ன் த‌ம‌து ஊழிய‌க்கார‌ராகிய‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளை அனுப்பின‌ பின்பு இறுதியில் த‌ம‌து ஒரே பேறான‌ குமார‌னை அனுப்பினார். இது எதைக் காட்டுகிற‌து என்றால், தாம் மக்களிடம் பேசும்படிக்கு‌ இறுதியில் சென்றவ‌ர் வெறும் இறைத்தூதுவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌, தாம் தேவ‌னின் நேச‌ குமார‌னும் அனைத்துக்கும் வாரிசானவர் (அனைத்திற்கும் சொந்தக்காரர்) என‌ இயேசு புரிந்து கொண்டிருந்தார் என்ப‌தேயாகும். (ம‌த்தேயு 28:18; லூக்கா 10:22; யோவான் 5:17-31; 10:36; 13:3; 16:13-15; 17:10 ம‌ற்றும் எபிரேய‌ர் 1:2-3)

உண்மையில், பிதா தாமே “இயேசு தம் நேசகுமாரன்” என சாட்சியளிக்கின்றார்.

அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 1:9-11

ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 9:2-7

கிறிஸ்து தேவகுமாரன் என்று தேவனே கொடுத்த‌ சாட்சியை முஹம்மது மறுப்பதினால், முஹம்மது, இறைவனின் தீர்க்கதரிசியோ அல்லது அவரின் முத்திரை பெற்றவரோ இல்லை என்பதனை அறிய‌ இது ஒன்றே போதுமானது.
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17-18

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ….சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். …இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளி 22:12-13,16,20

ஆண்ட‌வ‌ராகிய‌ இயேசு கிறிஸ்து ஆல்பாவும் ஒமேகாவுமாக‌வும், ஆர‌ம்ப‌மும் முடிவுமாக‌வும், முத‌லும் இறுதியுமாக‌வும் இருக்கிறார் என சொல்லியுள்ளார். ப‌டைப்பு ம‌ற்றும் அனைத்துக் கிரியைக‌ளின் முழுமைக்கும் இயேசுவே பிற‌ப்பிட‌ம் என்பதே இத‌ன் பொருள். கிறிஸ்து ஒருவ‌ரே அனைத்து ஆக்கங்களையும் தம் நோக்கத்தின்படியும் விருப்பத்தின்படியும் நடத்தி ஆளுகை செய்கின்ற‌வ‌ர்.

ப‌ழைய‌ ஏற்பாட்டின் பிண்ணனியின் படி தன்னை, "முத‌லும் முடிவுமான‌வ‌ர் - the First and the Last" எனக் குறிப்பிட்டது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஒரே மெய்த் தேவன் என்பதையே காட்டுகின்றது.
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். ஏசாயா 44:6

யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே. ஏசாயா 48:12

ப‌டைப்பு ம‌ற்றும் அனைத்துக் கிரியைக‌ளின் முழுமைக்கும் இயேசுவே பிற‌ப்பிட‌ம் என்பதையும் கிறிஸ்துவே பிதாவுட‌னும் ப‌ரிசுத்த‌ ஆவியுட‌னும் இணைந்து ஒரே மெய்க் க‌ட‌வுளாக‌ இருக்கிறார் என்ப‌தையும் முஹம்மது ஏற்றுக் கொள்ள‌வில்லை. இத‌னால் முஹம்மது தேவ‌னின் முத்திரை அல்ல‌ என்றும் அவ‌ர் மெய்யான‌ தேவ‌னால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ உண்மை இறைத்தூத‌ர் அல்ல‌ என்றும் அறிய‌லாம்.

ப‌ழைய‌ ம‌ற்றும் புதிய‌ ஏற்பாட்டில், தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்துவின் வ‌ருகையினால் அவைகளின் நோக்கங்களும், அவைகளின் நிறைவேறுதலும் முழுமை அடைகிறது என்று ஆணித்த‌ர‌மாகச் சொல்லப்படுகிறது.

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். எபிரெயர் 1:1-3

தீர்க்கதரிசிகளின் மூலமாக மனிதர்களிடம் பேசிய தேவன், தமது இறுதி வெளிப்பாடினைத் தமது குமாரன் மூலமாக நிறைவேற்றுகிறார். குமாரனும் தமது செய்தியினைத் தாம் நியமித்த மனிதர்களின் வழியாக வழங்குகின்றார்.
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். யோவான் 15:16

அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:7-8

சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்… அதற்குக் கர்த்தர் நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன். அப்போஸ்தலர் 9:1-6, 15-16

இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுய ஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் 26:12-18

அன்றியும் கன்னிகைகளைக் குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். I கொரிந்தியர் 7:25

ஒருவன் தன்னைத் தீர்க்தரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும் . I கொரிந்தியர் 14:37-38

கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே…ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். I தெசலோனிக்கேயர் 4:2, 8

ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரெயர் 2:1-4

பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகாராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். II பேதுரு 3:1-2

சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது….. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. வெளி 1:1-3, 10-11
இவைகளைத் தங்கள் சுய விருப்பத்தின்படியல்லாமல், இந்த அப்போஸ்தலர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தினால் தங்களின் எஜமானனின் கட்டளைகளாக அவைகளைப் பதிவு செய்யவும் அறிவிக்கவும் முற்பட்டனர் என்பதையே இவ்வசனங்கள் நமக்கு உறுதி செய்கின்றன‌.

இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற அர்த்தத்தையும் நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. தானியேல் 9:20-26
இப்பகுதியில் காணப்படுபவைகளின்படி, காபிரியேல் தூதன், மேசியா வருமட்டும் அறுபத்தி ஒன்பது வாரங்கள் (ஏழு வாரமும் + அறுபத்திரண்டு வாரமும்) செல்லும் என்றும், அதன் பின்பு மேசியா வந்து சங்கரிக்கப்படுவார் ("cut off") என்றும், எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அதிகாரிகளால் அழிக்கப்படுமென்றும் தானியேலுக்கு அறிவிக்கிறார். இந்தக் கால கட்டத்தில் தரிசனமும் வெளிப்பாடும் நிறைவடையும்.

இந்த நிகழ்வுகள், இயேசுவின் முதலாம் வருகையின் போது அவர் கொடூரமாக சிலுவையில் அடிக்கப்பட்ட போதும் அதின் பின்பு எருசலேமும் இரண்டாம் தேவாலயமும் அழிக்கப்பட்டபோதும் நிறைவேறின‌ (33-70 AD). இது, கிறிஸ்துவின் வருகைக்குப்பின் அவரால் நியமிக்கப் பெற்ற எந்த ஒரு தூதனும் வரப்போவதில்லை என்பதினைத் தெளிவாக வலியுறுத்துகிறது. கிறிஸ்துவுக்குப் பிறகு, தான் ஒரு தீர்க்கதரிசி என அறிக்கையிட்டுக் கொள்ளும் எவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மட்டுமே, கிறிஸ்துவும் அவரின் அப்போஸ்தலரும் போதித்த சுவிசேஷத்தினை உறுதி செய்யும் வகையில் தீர்க்கதரிசனம் சொல்லியாக வேண்டும்.

ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள். மத்தேயு 23:34
தீர்க்கதரிசிகளை அனுப்புவேன் என்று ஆண்டவராகிய இயேசு உரைக்கிறார். தேவன் ஒருவரே தீர்க்கதரிசிகளை அனுப்பவும் அவர்களை பலப்படுத்தவும் முடியும் என்பதினால் இயேசுவே தேவன் என்பதை இது நிலைநிறுத்துகிறது. மேலும், ஒரு தீர்க்கதரிசி, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலேயே பேச வேண்டும் என்பதினையும் இயேசுவின் மற்றும் அப்போஸ்தலரின் செய்தியையும் உறுதிப்படுத்துகிறது. மீண்டும்:

மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:11-13

இயேசு தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் சுவிசேஷர்களையும் அனுப்புகிறவர் என்கின்ற கருத்தை இப்பகுதி மீண்டும் தெளிவாக்குகிறது. இத்தகைய தீர்க்கதரிசிகளில் சிலர்:

அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 11: 27-29

நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். அப்போஸ்தலர் 21:10-11

யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி; அப்போஸ்தலர் 15:32

இதன் பொருள் என்னவெனில், தேவன் அனுப்பியவர்களில் இயேசு ஒருவரே தேவன் நேரடியாக அனுப்பிய இறுதியானவர் என்பதே. அதின் பின்பு கிறிஸ்துவே ஏனைய தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் அனுப்புபவராக உள்ளார்.

நீர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன் . யோவான் 17:18

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். யோவான் 20:21-23
கிறிஸ்து முன்னறிவித்தது இதோ:

இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மாற்கு 14:9

இதே கருத்து வேறொரு இடத்திலும் வலியுறுத்தப்படுகிறது:

பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, வெளி 14:6

சுவிசேஷம் என்பது அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலத்திலும் இரட்சிப்பின் வழியே என்றும் இது உலகம் முழுவதிலும் அறிவிக்கப்படும் என்றும் இந்தப் பகுதி விளக்குகின்றது. இயேசுவால் அறிவிக்கபட்ட இந்த‌ சுவிசேஷத்திற்கு முரண்பட்ட எந்தவொரு செய்தியைக் கொண்டு வருபவரும் தேவனிடம் இருந்து வந்தவரல்ல. பவுல் அப்போஸ்தலரின் வார்த்தைகளில் சொல்வோமானால்:

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:6-9

முஹம்மதுவிட‌ம் பேசிய தேவ‌தூத‌ன் கிறிஸ்து அறிவித்த‌ சுவிசேஷ‌த்திற்கு முர‌ணான‌ செய்தியைக் கொண்டு வந்தான் என‌க் காண்ப‌தினால், இந்த‌த் தூத‌ன் தேவ‌னின் நித்திய‌ த‌ண்ட‌னைக்குப் பாத்திர‌ன் ஆகிறான். இத‌னால் இந்த‌ தேவ‌ தூத‌ன் காபிரியேல் அல்ல‌வென்றும், மாறாக‌ இவ‌ன் ச‌த்தானால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ஒரு போலி தேவ‌ தூத‌ன் என்றும் அறிகிறோம். இது ஒன்றும் ஆச்ச‌ரிய‌ம‌ல்ல‌; ஏனெனில், சாத்தான், ம‌க்க‌ளை மெய்யான இர‌ட்சிப்பின் செய்தியைத் த‌ழுவிக்கொள்வ‌தைத் த‌டுத்து அவ‌ர்க‌ளை ஏமாற்ற‌, ஒளியின் தூதனாக வேட‌மணிந்து வ‌ருவான் எனப் ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌ம் தெள்ள‌த் தெளிவாக‌க் கூறுகிற‌து:

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். II கொரிந்தியர் 11:13-15

இதன் காரணமாகவே, பரிசுத்த வேதாகமம், கள்ளத் தீர்க்கதரிசிகளை, உண்மையானவர்களிடமிருந்தும், பொய் சொல்லும் ஆவியினை தேவனின் பரிசுத்த ஆவியிலிருந்தும் வேறுபடுத்தி அறிந்துகொள்ள ஒரு சோதனை முறையைக் கொடுத்துள்ளது:

ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். I கொரிந்தியர் 12:3

பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள். நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். I யோவான் 2:18-24

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். I யோவான் 4:1-6
இந்த‌ வ‌சன‌ங்க‌ளின்ப‌டி, இயேசு, மாமிசத்தில் வந்த தேவ‌னின் நித்திய‌ குமார‌ன் என்பதைனையும் அவரது இறைத் தன்மையையும் ம‌றுத‌லிக்கும் எந்த‌வொரு ம‌னித‌னும் அல்லது ஆவியும் இறைவனால் உண்டான‌வை அல்ல‌ என‌ விள‌ங்குகின்ற‌து. இஸ்லாம், இந்த‌ அடிப்ப‌டை உண்மைக‌ளை ம‌றுத‌லிப்ப‌தால், அது, மெய்யான‌ இறைவனிடமிருந்து வந்திருக்க‌ முடியாது.

உண்மையில், தேவன் தம் குமாரனைக் குறித்து கொடுத்த‌ சாட்சியை ம‌றுத‌லிப்ப‌தால், இஸ்லாம் தேவ‌னைப் பொய்ய‌ராக்குகிற‌து.


நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். I யோவான் 5:9-12

ஆண்டவராகிய இயேசு தொடர்கிறார்:

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சிகொடுப்பார். நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். யோவான் 15:26-27

இயேசு சொன்னதின்படி, பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு இயேசுவுக்குச் சாட்சியாய் இருக்கும். இயேசுவுக்கு சாட்சியாய் இல்லாதிருக்கிற எந்தவொரு தீர்க்கதரிசியையும் கள்ளத் தீர்க்கதரிசியாகவே கருத வேண்டும். உண்மையில், தீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவை அறிவிப்பதாகவே இருக்க வேண்டும்.

அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். அப்போஸ்தலர் 10:42-43

அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். வெளி 19:10

தீர்க்கதரிசனத்தின் மையக் கருத்து இயேசுவே, அதாவது அவரின் வரலாறே. ஏனெனில், அனைத்தும் அவராலே ஒன்றிணைக்க‌ப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்படுகின்றன‌.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். கொலோசெயர் 1:19-22
அனைத்திலும் கிறிஸ்துவே ம‌கிமைப்ப‌டும்ப‌டிக்கு மேன்மையுள்ளவராக இருக்கும் படிக்கு, தேவ‌ன் இதனை இவ்வித‌மாய் உருவாக்கினார்.

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். கொலோசெயர் 1:15-18

சுருங்கக் கூறின்:
  • தாமே மனுக்குலத்திற்கு தேவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் என்பதை இயேசு அறிவிக்கிறார்.
  • கிறிஸ்துவின் வருகையுடன் தீர்க்கதரிசனங்களும் நோக்கமும் நிறைவடைகின்றன எனப் பழைய ஏற்பாடு உறுதிபடச் சொல்கிறது.
  • தீர்க்கதரிசனங்களின் மையக் கருத்து இயேசுவின் தெய்வத்துவம், அவர் தேவ குமாரனென்ற நிலைப்பாடு, அனைத்துப் படைப்புகளையும் ஆளுகை செய்யவல்ல‌ அவரது அதிகாரம் ஆகியன குறித்த சாட்சியே.
  • சுவிசேஷங்களின் செய்தி, உலகளாவியதும் அனைத்து மனிதர்க்கும் அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தும் வண்ணமாக‌ இரட்சிப்பின் ஒரே வழியாயும் இருக்கிறது.
  • கிறிஸ்துவுக்குப் பின் வரும் எந்தவொரு தீர்க்கதரிசியும் அவர் பிரசங்கித்து, புதிய ஏற்பாட்டில் பதிவிடப்பெற்ற நற்செய்தியின்படியே இயேசுவின் பெயரால் பேசவேண்டும்.  
மேலே க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ளின்ப‌டி, முஹம்மது ஒரு உண்மையான‌ தீர்க்க‌த‌ரிசியோ அல்ல‌து தேவ‌னின் ந‌பித்துவ‌ முத்திரை பெற‌ப்ப‌ட்ட‌வ‌ரோ அல்ல. தேவனின் ஒரேபேறான குமாரனும் மகிமையும் மகத்துவமுமானவருமாகிய இயேசுவைக் குறித்த தீர்க்கதரிசங்களின் அடிப்படையையும் மையக் கருத்தையும் முஹம்மது மறுதலிக்கிறார். இவ்வாறு அவர் பேசுவதினால், அவர் பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தும் மெய்யான தேவனின் (Yahweh Elohim) நபி அல்ல என்று காட்டிக்கொள்கிறார்.
இணைப்பு
தேற்றரவாளனாக முஹம்மது 
MUHAMMAD AS THE PARACLETE
முஹம்மது வரப்போவதை இயேசு முன்னறிவித்ததாகக் காட்ட சில முஸ்லிம்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கு அவர்கள் பெரும்பாலும் வேறொரு தேற்றரவாளனை (கிரேக்கத்தில் Paraclete) அனுப்புவது குறித்த வாக்குத்தத்தத்தைத் தங்கள் நபி குறித்த முன்னறிவிப்பாக மேற்கோள் காட்டுகிறார்கள். (யோவான் 14:16-17, 26; 15:26; 16:7-15)

யோவான் 14:26 ல், ஆண்டவராகிய இயேசு, பரிசுத்த ஆவியானவரே அந்தத் தேற்றரவாளன் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறார். ஆனால், முஸ்லிம்கள் தேற்றரவாளன் பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது என நிரூபிக்க யோவான் 16:7 ஐக் காட்டுகிறார்கள்.

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7

தேற்றரவாளன் வர வேண்டுமென்றால், தான் செல்ல் வேண்டும் என இயேசு தெளிவாக்குகிறார். கிறிஸ்து செல்லவில்லையெனின், தேற்றரவாளன் வரமாட்டார். பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் ஊழியக் காலத்திலேயே இருந்ததினால், தேற்றரவாளன் எனக் குறிப்பிட்டது அவரை அல்ல எனக் கொள்ளலாம் , எனவே இது கிறிஸ்து சென்ற பின்பு சுமார் அறுனூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த முஹம்மதுவைத் தான் குறிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். (மத்தேயு 3:16-17)

முஸ்லீம்களின் இத்த‌கைய விளக்கத்தில் உள்ள‌ பிர‌ச்சனை என்ன‌வெனில், இயேசு எவ்வாறான‌ சூழ்நிலையில் இவ்வாறு கூறினார் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை. உதார‌ண‌மாக‌, தேற்றர‌வாள‌ன் பிர‌ச‌ன்ன‌மாக‌வில்லை என‌ இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக, எதிர்காலத்தில் தேற்றரவாளன் வெளிப்படும் விதமாக இப்பொது அவர் வெளிப்படவில்லை என்பதைச் சொன்னார். (Jesus wasn't claiming that the Comforter was not already present, but that the Comforter would not be present in the manner that Jesus had described earlier). இந்தக் கருத்தின் சூழலில்‌ இயேசுவின் வார்த்தைக‌ளைப் பாருங்கள்:
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:16-17

தேற்றரவாளன் ஏற்கனவே சீஷர்களுடன் இயேசுவைப் பின் பற்றியவர்களுடன் பிரசன்னமாய் இருந்தார் எனவும் அவர்கள் அவரை அறிவார்கள் எனவும் ஆண்டவர் தெளிவாக வெளிப்படுத்துகிறார். இதில் வித்தியாசம் என்னவெனில், தேற்றரவாளன் சீஷர்களிடம் பிரசன்னமாய் இருந்த போதிலும், இயேசு பரம் ஏறி மகிமை அடையும் வரையிலும் அவர்களின் உள்ளங்களில் வலுப்பெற்று அவர்களை பலப்படுத்தவில்லை என்பதே. (The Lord clearly states that the Comforter was already present with the disciples and that his followers knew him. The difference is that even though the Comforter was present with the disciples he would not be able to indwell and empower them until Jesus ascended into heavenly glory.)
இந்த நோக்கில் தான் யோவான் தமது சுவிசேஷத்தில் இவ்வாறாய் குறிப்பிடுகிறார்:

பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன். யோவான் 1:32

பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. யோவான் 7:37-39

எனவே, யோவான் 16:7 ஐ அதின் சமீபத்திய மற்றும் விரிந்த சூழலில் ஆராய்வோமானால், தேற்றர‌வாளன் எனக் குறிப்பிடப்படுவது தேவனின் பரிசுத்த ஆவியையே என்பது விளங்கும். அது முஹம்மதுவைக் குறிக்கவில்லை.

மேலும், முஹம்மதுவை தேற்றர‌வாளனாய்ப் பார்க்கும் கண்ணோட்டத்தில் உள்ள கூடுதல் சிக்கல்களைக் கீழே காணுங்கள்:
  • யோவான் 14:17ன் படி, தேற்றர‌வாளன், ஒரே சமய‌த்தில் எல்லா சீஷர்களிலும் வாசம் செய்திருக்க வேண்டும். இது அவ்வாறாயின், அவர் ஒரு பொருளாகவோ மனிதனாகவோ அல்லாமல் ஒரு ஆவியாகத் தான் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் ஒரு பொருளோ மனிதனோ எல்லோரிலும் ஒரே சமயத்தில் வாசம் செய்வ‌து இயலாத காரியம், பல உருவில் வாழக்கூடிய‌ மனுஷர்களிருந்தால் கூட அவ்வாறு வாசம் செய்ய‌ முடியாது. எனவே தேற்றர‌வாளன் என்பவர் அனைத்திலும் வியாபித்து இருப்பவர் எனப் பொருள்படுகிறது (Comforter is omnipresent). இறைவன் தான் அவ்வாறு இருக்க முடியும் என்பதினால் தேற்றர‌வாளன் கடவுளாகத் தான் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம், முஹம்மதுவைக் கடவுளாகக் கருதாத பட்சத்தில், இத்தகைய கண்ணோட்டத்திற்கு அடிப்படையே இல்லை.  
  • தேற்றர‌வாளன் என்பவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வண்ணமாய், அவருக்கு உரிய மகிமையை அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். 
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். யோவான் 16:13-15

பிதாவுக்கு உரியவைகள் அனைத்தும் தம்முடையவைகள் என இயேசு உரிமை பாராட்டுகிறார். இது அவரை அனைத்துக்கும் வாரிசானவர் எனக்காட்டுகிறது. எனினும், குர்‍ஆன் அல்லாஹ்வை அனைத்துக்கும் வாரிசாக இனம் காட்டுகிறது.
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். சூரா: 15:23

நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள். சூரா: 19:40
இந்தக் கருத்துக்களை அலசும் போது, நாம் இயற்கையாகவே பெறும் முடிவு "முஹம்மதுவின் கடவுளாகிய அல்லாஹ், இயேசுவே!". கீழ்வரும் தத்துவ ரீதியான வாதத்தைப் பாருங்கள்!
  1. முஹம்மதுவே தேற்றர‌வாளன்
  2. தேற்றர‌வாளன் என்பவர் இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும்
  3. அனைத்துப் பொருட்களும் கிறிஸ்துவுக்கே சொந்தம்
  4. முஹம்மது அல்லாஹ்வை மகிமைப்படுத்தினார்
  5. அனைத்துப் பொருட்களும் அல்லாஹ்வுக்கே சொந்தம்
  6. எனவே, இயேசு தான் அல்லாஹ்!
ஆங்கிலத்தில்
  1. Muhammad is the Comforter
  2. The Comforter was to glorify Jesus
  3. All things belong to Christ
  4. Muhammad glorified Allah
  5. All things belong to Allah
  6. Therefore Jesus is Allah!
எந்த‌ முஸ்லிம் தான் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளுவார்? இத்த‌கைய‌ ஒரு வாத‌த்தை எந்த‌ ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள‌மாட்டார் என்கின்ற‌ உண்மையே, இயேசு முன்ன‌றிவித்த‌ தேற்றர‌வாள‌ன் “முஹம்மது” அல்ல‌ என்கின்ற‌ வாத‌த்தை வ‌லுவுள்ள‌தாக்குகிற‌து.

உயிர்த்தெழுந்த‌ ந‌ம்முடைய‌ ஆண்ட‌வ‌ரும் மீட்ப‌ருமாகிய‌ இயேசு கிறிஸ்துவின் ப‌ணியில் சதாகாலங்களிலும், ஆமென். ஆண்ட‌வ‌ராகிய‌ இயேசுவே, வாரும். உம்மை எப்பொழுதும் நாங்க‌ள் நேசிக்கிறோம்.